
பள்ளிகளில் விரைவில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்!!! ஆசிரியர் தேர்வு வாரிய பட்டதாரி ஆசிரியர்களின் பணிக்கு தேர்வு செய்து அளிக்கப்பட்ட 231 நபர்கள், சென்னைப் பள்ளிகளில் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "2023ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணிகளுக்காக 3,192 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 13ஆம் தேதி வரை தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பிறதுறை பள்ளிகளில் காலியாக இருக்கும் 3 ஆயிரத்து 192 பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியருக்கான பணியிடங்களுக்கு பிப்ரவரி 4ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், தமிழ் மொழி திறன் அறிவிற்கான 30 கேள்விகள் - 50 மதிப்பெண்களுக்கும், முதன்மைப் பாடத்திலிருந்து (தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல்) ...