
CBSE - 10, பிளஸ் 2 பொதுதேர்வு தேதி அறிவிப்பு.. 2025 பிப்ரவரி 15ல் தொடங்கும் தேர்வுகள்.. விபரம் சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025 பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 18 வரை நடைபெறுகிறது. மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் 2025ம் ஆண்டுக்கான 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வை பொறுத்தமட்டில் 2025 பிப்ரவரி 15ம் தேதி ஆங்கிலம், பிப்ரவரி 20ல் அறிவியல் தேர்வுகள் நடக்கிறது. பிப்ரவரி மாதம் 27 ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகளும், மார்ச் 10ம் தேதி கணிதம், மார்ச் 13ம் தேதி ஹோம் சயின்ஸ் தேர்வுகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு என்பது 2025 பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை பொறுத்தமட்டில் பிப்ரவரி 15ம் தேதி தொழிற்கல்வி பாட ( entrepreneurship exam)தேர்வு நடைபெற உள...