''ஆசிரியர்களை விற்கத் துடிக்கும் பள்ளிக் கல்வித்துறை; பெரும் அவமானம்''- அன்புமணி கண்டனம்; காரணம் என்ன? ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறை விற்பனை செய்து வருவதாகவும் ஏற்கனவே பற்றாக்குறை நிலவும் சூழலில், நிலையை மேலும் மோசமாக்குவதா எனவும் பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ''தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள 497 காப்பாளர் பணியிடங்களை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள 497 காப்பாளர் பணியிடங்களை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கும் நிலையில், எஞ்சியிருக்கும் ஆசிரியர்களையும் விடுதிகளுக்கு விற்பனை செய்ய கல்வித்துறை துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். ஆசிரியர்கள் விரும்பினால் விண்ணப்பிக்கலாம் பள்ளிக்கல்வித் துறையின் இயக்குனர் இதுகுறித்து அனுப்பி
Posts
Showing posts from November 15, 2024