
முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் - அரசிதழில் வெளியீடு முதுநிலை ஆசிரியர் பணித் தேர்வுக்கான பாடத்திட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி, முதுநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர்(தையல், உடற்கல்வி உட்பட), வட்டாரக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நேரடி நியமன முறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பணியில் உள்ள காலியிடங்களில் பதவி உயர்வு மூலமாக 50 சதவீதமும், நேரடி நியமனம் வாயிலாக 50 சதவீதமும் நிரப்பப்படுவது வழக்கமாகும். இதற்கிடையே முதுநிலை ஆசிரியர் தேர்வை பொருத்தவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. பழைய பாடத்திட்டத்தின்படியே தேர்வு நடைபெறுகிறது. கடைசியாக முதுநிலை ஆசிரியர் தேர்வு 2021-ல் நடத்தப்பட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதேநேரம் இந்த ஆண்டுக்கான முதுநிலை ஆசிரியர் தேர்வு அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைக்க பள்ளிக்கல்வித் ...