
நிதி நெருக்கடியில் தமிழக அரசு: 5960 ஆசிரியர்களுக்கு பணி ஆணை விவகாரம் - டாக்டர் இராமதாஸ் பரபரப்பு அறிக்கை! பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 3,192 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பல மாதங்களுக்கு முன்பாகவே நிறைவடைந்து விட்ட நிலையில், அவர்களை பணி நியமனம் செய்ய அண்மையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூடத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசின் கொள்கை அளவிலான ஒப்புதல் கிடைத்த பிறகு தான் ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிக்கையே வெளியிடப்படும். ஆனால், தேர்வு முடிவுகளே வெளியிடப்பட்டு பல மாதங்களான பிறகு ஆசிரியர்கள் நியமனத்திற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுவது வினோதமாக உள்ளது. 3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த பிப்ரவரி 4ம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18ம் தேதி வெளியிடப்பட்டன. அதைத...