ஆசிரியர் கோரிக்கைகள் தேர்தலுக்குள் நிறைவேற்றப்படும்: பள்ளி கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஆசிரியர்களின் கோரிக்கைகள் சட்டமன்ற தேர்தலுக்குள் நிறைவேற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறையில் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கான ஓய்வு ஊதியத் திட்டம் நிறுத்தப்பட்டு பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர்கள் மட்டும் அல்லாமல் அரசு ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது ஆசிரியர்களின் கோரிக்கையாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆட்சியின் போது, ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பல ஆசிரியர்கள் மீது குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டது. சிலர் சிறை...
Posts
Showing posts from November 9, 2024