Posts

Showing posts from October 30, 2024
Image
  TRB சார்பில் உதவிப் பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித் தேர்வு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித் தேர்வை டிஆர்பி விரைவில் நடத்த இருக்கிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமால் நெட் அல்லது ஸ்லெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.  நெட் தேர்வை யுஜிசி சார்பில் தேசிய தேர்வு முகமையும் (என்டிஏ) ஸ்லெட் தேர்வை அந்தந்த மாநில அரசின் சார்பில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகமும் நடத்தும். அந்த வகையில், தமிழகத்தில் ஸ்லெட் தகுதித் தேர்வை 2024 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.  இதைத்தொடர்ந்து, ஸ்லெட் தேர்வுக்கான அறிவிப்பை அப்பல்கலைக்கழகம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டு அதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக ஏப்ரல் 1 முதல் 30 வரை பெற்றுக்கொண்டது. தேர்வு ஜூன் 7 மற்றும் 8-ம் தேதி கணினி வழியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஹால் டிக்கெட்டும் வெளியிடப்பட்டது.  இந்நிலையில், தேர்வு தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக, தொழில்நுட்பக் கார...
Image
  தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, 2877 அரசு காலிபணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 2877 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. டிரைவர் மற்றும் நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2340 டிசிசி பணியாளர்கள் மற்றும் 537 தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.