Posts

Showing posts from October 21, 2024
Image
  வேலை இல்லாதவர்களுக்கு  உதவித்தொகை விண்ணப்பம் செய்வது குறித்த முழு விவரம் உள்ளே!! இன்றைய காலத்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம்.குறிப்பாக பொறியியல் படிப்பு முடித்த பல இளைஞர்கள் உரிய வேலை வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் நலனிற்காக தமிழக அரசு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக புதுபித்தவர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்கும். பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதற்கு மேலான  கல்வி படிப்பு முடித்தவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் ஆவர். செப்டம்பர் 30,2024 அன்றைய தேதியில் இருந்து ஐந்தாண்டுகள் நிறைவுற்று வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்து வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கிவருகிறது. தகுதி: 1)விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72.00
Image
  ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு! நாடு முழுவதும் உள்ள இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர், பட்டதாரி பயிற்சி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய ராணுவ பொதுப் பள்ளிகள் என்பது ராணுவ அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கான ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பாகும். இது இந்தியாவின் மிகப் பெரிய தொடர் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். ராணுவ பொதுநலக் கல்வி அமைப்பு இதனை செயல்படுத்தி வருகிறது.  இந்திய அரசின் நிதி உதவியுடன், முதன் முதலில் 1983 இல் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் தற்போது 137 ராணுவ பொதுப் பள்ளிகளும் 249 மழலையர் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் இந்திய ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு மத்திய உயர்நிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றி ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கல்வி அளிக்கப்படுகிறது. தற்போது நாடு
Image
  இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை நிறுத்தி வைத்திருப்பது ஏன்?: அன்புமணி ராமதாஸ் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா?என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.  தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், அவர்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடங்கப்பட்ட பணிகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது அந்தப் பணிகளுக்காக காத்திருக்கும் தேர்வர்களிடையே ஏமாற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களை நியமிப்பதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 3192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18-ஆம் நாள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரி