
9 லட்சம் பேர் எழுதினர்.. யுஜிசி-நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு! தேசிய தேர்வு முகமையினால் (NTA) யுஜிசி-நெட் (UGC NET) தேர்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 5-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான இறுதி விடைக்குறிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில், முடிவுகள் நாளை வெளியாகும் என காலை தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வின் முடிவுகள் இன்று (அக்.17) வெளியிடப்பட்டன. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பி.எச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை சார்பில் இத்தேர்வு ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல் கட்ட நெட் தகுதித் தேர்வு கடந்த ஜூன் 19ம் தேதி நடத்தப்பட்டது. ஆனால் இந்தத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததால் உடனடியாக அந்தத் தேர்வு ...