
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; 3.50 லட்சம் காலியிடங்களை காக்காய் தூக்கிச் சென்றதா?- பாமக கேள்வி குரூப் 4 பணியிடங்களில், 15,000 பேரை நிரப்ப இடமில்லை என்றால் 3.50 லட்சம் காலியிடங்கள் இருப்பதாக ஸ்டாலின் கூறியது வடிகட்டிய பொய்யா என்று பா.ம.க.செய்தித் தொடர்பாளர் கே.பாலு கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ''தமிழ்நாடு அரசுத் துறைகளில் குரூப் 4 பணியிடங்கள் லட்சக்கணக்கில் காலியாக இருக்கும் நிலையில், அப்பணிக்காக டி.என்.பி.எஸ்.சி நடத்திய போட்டித்தேர்வுகளின் மூலம் நிரப்பப்படவுள்ள இடங்களின் எண்ணிக்கையை 8,932-ல் இருந்து 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். சமூக நீதியைக் கருத்தில் கொண்டு அவர் விடுத்த இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், இருக்கும் இடங்களைத்தானே நிரப்ப முடியும்? ஆளுநரை எதிர்த்து அன்புமணி இராமதாஸ் கேள்வி கேட்டாரா? என வினா எழுப்பியுள்ளார். மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராக பொறுப்பேற்று, இப்படி அறிக்கை வெளியிடும் நிலைக்கு உயர்ந்துள்ள கயல்விழ...