
மந்தகதியில் இயங்கும் டிஆர்பி: ‘டெட்' உட்பட 3 தேர்வுகளை நடத்துவது எப்போது? இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய டெட் உள்ளிட்ட 3 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடாமல் காலதாமதம் செய்வது தேர்வர்களைகடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி வாயிலாக போட்டித் தேர்வுநடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர். இதேபோல், அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்கள், அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக (டிஆர்பி) தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வும் (டெட்) டிஆர்பி-யால் நடத்தப்படுகிறது. தேர்வுக்கு தயாராக முடியும்: ஓராண்டில் காலியாகவுள்ள அரசு பணியிடங்களுக்காக நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுகள் விவரம், அதற்கான அறிவிப்பு, தேர்வு தேதி மற்றும் முடிவுகள் வெளியாகும் விவரம் உள்ளிட்டவை அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இதனால் தேர்வர்கள் முன...