
ரேஷன் கடைகளுக்கு 2000 பணியாளர் தேர்வு.! எந்த தேர்வும் இல்லை- நேரடி நியமனம் - வெளியான முக்கிய அறிவிப்பு தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 2000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்காக கல்வி தகுதி மற்றும் விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பல லட்சம் இளைஞர்கள் ஆண்டு தோறும் கல்லூரி, டிப்ளமோ மற்றும் பள்ளி படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பாக பல்வேறு வகையில் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. குறிப்பாக அரசு பணியில் சேர விரும்புபவர்களுக்கு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி லட்சக்கணக்கான பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு பேக்கரி, டிஜிட்டல், யூடியூப், வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி தொடர்பாக பயிற்சி அளித்து கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. ...