கல்லூரிகளில் விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை -அமைச்சா் கோவி. செழியன் அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வா் நடவடிக்கை எடுப்பாா் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: அரசு கல்லூரிகளில் பேராசிரியா்கள் பற்றாக்குறை காரணமாக கௌரவ விரிவுரையாளா் என்ற பதவியைத் தமிழக முதல்வா் உருவாக்கி, தேவைப்படும் இடங்களில் நிரப்பியுள்ளாா். அதன் பிறகும் பற்றாக்குறை உள்ள நிலையில், விரிவுரையாளா்களை நியமனம் செய்வதற்கான ஆணையைத் தமிழக முதல்வா் பிறப்பிக்கவுள்ளாா். இந்தப் பணி விரைவில் மேற்கொள்ளப்பட்டு, அக்குறைகளும் போக்கப்படும். துணைவேந்தா் பதவி பொருட்டு ஏற்பட்டுள்ள இடா்பாடு குறித்து தமிழக முதல்வா் உரிய கவனம் செலுத்தி வருகிறாா். சுயமரியாதையை இழக்காமல், மாநிலத் தன்மையைக் கட்டிக் காப்பதில் என்றைக்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதை முதல்வா் மீண்டும், மீண்டும் உறுதி செய்வாா். அதற்கான பணியும் ந...
Posts
Showing posts from October 5, 2024
- Get link
- X
- Other Apps
டி.பி.ஐ., வளாகத்தில் ஆசிரியர்கள் முற்றுகை ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற 200க்கும் மேற்பட்டவர்கள், பள்ளி கல்வி அலுவலகங்கள் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தை நேற்று முற்றுகையிட்டனர். தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வாணையம் சார்பில், பி.டி., பி.ஆர்.டி.இ., தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 12 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு 3,192 காலி பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றோருக்கு, கடந்த ஜூன் மாதம் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அடுத்த கட்டமாக நடக்க வேண்டிய கலந்தாய்வு, பணி நியமனங்கள் இதுவரை நடக்கவில்லை. இதுவரை, தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பலரும் தனித்தனியாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளை சந்தித்து, இதை வலியுறுத்தி வந்தனர். அதற்கு பலனில்லாத நிலையில், நேற்று காலை 200க்கும் மேற்பட்டோர், சென்னை டி.பி.ஐ., வளாகம் முன் குவிந்தனர். போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், வாக்குவாதமும் சலசலப்பும் ஏற்பட்டது. இதையடுத்து, ஆசிரியர்கள் சிலரை மட்டும் அனுமதித்தனர். அவர்கள், உடனடியாக கலந்தாய்வை நடத்தி, பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அ...