
டிப்ளமோ முடித்திருந்தால் போதும்..!! தேர்வு கிடையாது..!! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை..!! தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம், கோவை, சென்னை, சேலம், நெல்லை ஆகிய மண்டலங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 499 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி, பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பதாரர்கள் 21.10.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் (Apprentices) – 201: மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் – 170, சிவில் இன்ஜினியரிங் – 10, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் – 12, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் – 9. டிப்ளமோ (Diploma) – 140: மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் – 125,, சிவில் – 5, கணினி அறிவியல் – 7, எலக்ட்ரிக்கல் மற்றும் ...