Posts

Showing posts from October 2, 2024
Image
  ரயில்வேயில் 14,298 டெக்னீஷியன் வேலைகள்.. நல்ல சம்பளம்.. இப்போதே விண்ணப்பிக்கவும்! தற்போது வேலை வாய்ப்புக்கு போட்டி அதிகமாக உள்ளது. நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைகள் வேண்டுமானால், கல்வித் தகுதியுடன் கூடுதல் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும். போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தனித் திறமையை வெளிப்படுத்த வேண்டும். நீங்களும் அரசு வேலையைத் தேடுகிறீர்களானால், இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். ரயில்வேயில் 14,298 டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைகள் கிடைத்தால் வாழ்க்கையில் செட் ஆகலாம். சமீபத்தில், ரயில்வே துறை வேலையில்லாதவர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. பல்வேறு ரயில்வே மண்டலங்களில் உள்ள 14,298 டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், முந்தைய அறிவிப்பில் 9,144 காலியிடங்கள் இருந்த நிலையில், தற்போது மேலும் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 14,298 பணியிடங்கள் ரயில்வே துறையால் நிரப்பப்படும். விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு உடன் தொடர்புடைய டிரேடில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். B.Sc,...
Image
  அரசு துறைகளில் 4 லட்சம் காலிப்பணியிடம் பணிச்சுமையால் தவிப்பதாக குமுறல் தமிழக அரசு துறைகளில் 4 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதால், பணிச்சுமையில் சிக்கி தவிப்பதாக சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் அதிகாரி முதல் அலுவலக உதவியாளர் வரை 12 லட்சம் பேர் பணிபுரிய வேண்டும். அதில் 4 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. பணியாற்றும் 8 லட்சம் பேருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறையில் 1 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அதில் 31,500 பேர் காலமுறை சம்பளம் பெறுகின்றனர். மற்றவர்கள் கடந்த 12 ஆண்டுக்கும் மேலாக மாதம் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில பொது செயலாளர் ஜெ.லட்சுமிநாராயணன் கூறியதாவது: 4 லட்சம் காலிப்பணியிடத்தால், பணிச்சுமையில் அரசு ஊழியர்கள் தவிக்கின்றனர். புதிய பென்ஷன் திட்டத்தை ஒழித்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  காலிபணியிடங்களை காலமுறை சம்பளத்துடன் நியமிக்க வேண்டும். சரண்டர் விடுப்பு, அகவிலைப்படி உள்ளிட்டவற்றை வழங்க வலியுறுத்தி, அக்., 5, 6 ல் கரூரில் மாநில ...