TNPSC : குரூப்-4 பணியிடங்கள் மேலும் அதிகரிக்கும்: கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்து காலியிடங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் ஜுன் மாதம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கட் ஆப்மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ),வனக்காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,244 இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் 9-ம் தேதி ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இத்தேர்வை 15 லட்சத்து 91 ஆயிரம் பேர் எழுதினர். இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சிஎன்ற போதிலும் தேர்வெழுதியவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே அறிவிக்கப...
Posts
Showing posts from October 1, 2024