
நிதி நெருக்கடியால் ஆசிரியா் நியமனங்கள் நிறுத்தம்: அன்புமணி கண்டனம் நிதி நெருக்கடியால் ஆசிரியா் நியமனங்களை தமிழக அரசு நிறுத்தியுள்ளதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் இடைநிலை ஆசிரியா்கள் தொடங்கி கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியா்கள் வரை அனைத்து நிலை ஆசிரியா் நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் ஒருவா் கூட நியமிக்கப்படவில்லை. தமிழகத்தில் 13 ஆயிரத்துக்கும் கூடுதலான ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களை மட்டுமே நிரப்பப் போவதாகவும், மீதமுள்ள பணியிடங்களை நிரப்ப நிதியமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் பள்ளிக் கல்வித் துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் நிதிநெருக்கடி ஐயத்தை உறுதி செய்கின்றன. ஒரு மாநிலத்தின் வளா்...