
போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்' - தமிழக அரசு அறிவிப்பு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள 6 மாத கால இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் பயிற்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- "டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி. ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்கள் இயங்கி வருகிறது. அந்த வகையில், கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெற்று, ப...