
பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனை வழங்க முடியாது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனை வழங்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு பணியில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் மனவியல் சார்ந்த பிரச்சனைகளைப் போக்க வாழ்வியல் சார்ந்த புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அதன் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆய்வில் மாணவர்களின் கற்றல் திறன் எந்த அளவுக்கு உள்ளது ஆசிரியர்களின் பயிற்சி முறை எவ்வாறு உள்ளது என அறிந்து கொள்ள ஆய்வு பணி நடைபெற்றது. இந்த ஆய்வில் பள்ளி உள்கட்டமைப்பு தொடர்பாக சில கோரிக்கை வந்துள்ளது அவை நபார்டு வங்கிகள் மூலம் நிதிகள் பெறப்பட்டு பள்ளிகளுக்கு செயல்படுத்தப்படும். கொரோனா க...