பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறப்பு ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக்கோரி திருச்சியில் மாவட்ட ஆட்சியரகம் முன்பு பகுதி நேர சிறப்பு ஆசிரியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா். ஓவிய ஆசிரியா், உடற்கல்வி ஆசிரியா், தையல் ஆசிரியா், கணினி ஆசிரியா் உள்ளிட்ட பணிகளில் தமிழக முழுவதும் பகுதிநேர சிறப்பு ஆசிரியா்கள், கடந்த 12 ஆண்டுகளாக மாத ஊதியமாக ரூ.12, 500 பெற்று பணியாற்றி வருகின்றனா். இவா்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுகுறித்து திமுக தனது தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா். ஆா்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் சேசு ராஜா முன்னிலை வகித்தாா். மாவட்ட பொருளாளா் மனோகரன் இணை செயலாளா்கள் சசிகுமாா், புவனேஸ்வரன் துணைத் தலைவா்கள் காந்திநாதன், ரூஸ்வெல்ட், மகளிா் அணி செயலாளா் ஸ்டாலின் டாரத்தி, செல்வராணி உள்பட நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
Posts
Showing posts from August 20, 2024
- Get link
- X
- Other Apps
'டெட்' தேர்வு அறிவிப்பு எப்போது? ஆசிரியா்கள் எதிா்பாா்ப்பு 'டெட்' தோ்வுக்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் எப்போது வெளியிடும் என்ற எதிா்பாா்ப்பு பி.எட். பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியா் பயிற்சி முடித்தவா்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களும், பட்டதாரி ஆசிரியா்களும் 'டெட்' எனப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் ( என்சிடிஇ ) விதிமுறைகளின் படி, ஆண்டுக்கு இரு முறை 'டெட்' தோ்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் இந்தத் தோ்வை ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது. நிகழாண்டு 'டெட்' தோ்வுக்கான அறிவிப்பு ஏப்ரலில் வெளியிடப்பட்டு ஜூலையில் தோ்வு நடத்தப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் தோ்வுகால அட்டவணையில் அறிவித்திருந்தது. தற்போது, ஆகஸ்ட் மாதம் நடைபெற்று வரும் நிலையிலும் 'டெட்' தோ்வு குறித்த அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் இன்னும் வெளியிடவில்லை. இதனால், 'டெட்'...
- Get link
- X
- Other Apps
பட்டதாரி ஆசிரியா் காலிப்பணியிடங்களை அதிகரிக்கக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநரிடம் மனு பட்டதாரி ஆசிரியா் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா் காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என டிஆா்பி தோ்வெழுதியவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் பதவிகளில் காலியாகவுள்ள 3,192 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி போட்டித் தேர்வை நடத்தியது. இதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற பிஎட் பட்டதாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் 41,185 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 40,136 பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் மே 18 மற்றும் 22-ம் தேதிகளில் வெளியிடப்பட்டன. ஒரு காலியிடத்துக்கு ஒன்றே கால் பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இத்தேர்வெழுதி நல்ல மதிப்பெண் பெற்றும் காலியிடங்கள் குறைவால் பணிவாய்ப்பு பெற முடியாத தேர்வர்கள் சுமார் 100 பேர் நேற்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பனை சந்தித்து காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை வ...