ரயில்வே வேலை வாய்ப்பு; 7951 பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை என்ன? விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.08.2024 இந்திய ரயில்வேயில் இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 7951 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் 652 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காலியிடங்களின் எண்ணிக்கை : 7951 நிரப்பப்படும் பதவிகள்: Junior Engineer Depot Material Superintendent Chemical & Metallurgical Assistant Chemical Supervisor / Research Metallurgical Supervisor / Research கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். வயதுத் தகுதி : 01.01.2025 அன்று 18 வயது முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும்
Posts
Showing posts from August 11, 2024
- Get link
- X
- Other Apps
"வடமாவட்டங்களில் 72% ஆசிரியர் காலி பணியிடங்கள்" - தமிழக அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு ஆசிரியர் காலி பணியிடங்களில் 72% வடமாவட்டங்களில் தான். எனவே, மாவட்ட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 10,000க்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 72.32% பணியிடங்கள் வட மாவட்டங்களில் இருப்பதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கல்வி உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் வடக்கு மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதும், அதை அரசு வேடிக்கைப் பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது. பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு கடந்த சில வாரங்களாக நடைபெற்று முடிந்தது. அதன் பின்னர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் 5786 காலியாக உள்ளன. இவை தவிர 2000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசி
- Get link
- X
- Other Apps
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62ஆக உயர்த்தப் போவதாக பரவும் தகவல் வெறும் வதந்தியே: தமிழ்நாடு அரசு விளக்கம் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62-ஆக உயர்த்தப் போவதாக பரவும் தகவல் வெறும் வதந்தி என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. ஓய்வு வயதை 62-ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை, அப்படி எந்த ஆலோசனையும் இல்லை என அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அரசு தெரிவித்துள்ளதாவது; “அரசு ஊழியர் ஓய்வு வயது 60-லிருந்து 62 ஆக மாற்றியமைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் 15 தினத்துக்குள் அரசாணை வெளியிட வாய்ப்பு உள்ளது’ என்ற தகவல் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் வதந்தியே. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.