
லோகோ பைலட் டூ ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் வரை.. மொத்தம் 32,000 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள் இந்தியன் ரயில்வேயில் லோகோ பைலட், உதவி ஆய்வாளர், டெக்னீஷியன் என பல்வேறு பதவிகளுக்கு சுமார் 32,000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எனவே விருப்பமுள்ளவர்கள் உடனடியாக பணிக்கு விண்ணப்பிக்கவும். உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் 'இந்தியன் ரயில்வே' முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இது 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. ஒவ்வொரு நாளும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே அதற்கேற்றார் போல ரயில்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 50 ரயில்வே ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். அவர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த பணிகள் மந்த கதியில் நடைபெற்று வந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ரயில்வே பாதுகாப்பு துறையில் மட்டும் சு...