Posts

Showing posts from July 16, 2024
Image
  கிராம தபால் நிலையங்களில் 44228 பேருக்கு வேலை வாய்ப்பு! இந்திய அஞ்சல் துறையில் உள்ள கிராம அஞ்சல் பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் , விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் இந்தியா முழுவதும் அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 44228 கிராம அஞ்சல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 3,789 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. அஞ்சல்துறையின் துறை சாராத சேவை அமைப்பு 150 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கிராமப்பகுதிகளில் முறையான முழு நேர ஊழியர்களுக்கு அவசியம் இல்லாத நிலையில் அடிப்படை, சிக்கன அஞ்சல் சேவை வழங்க இந்த அமைப்பு தேவைப்பட்டது. 1,29,346 துறை சாராத கிளை அஞ்சல் அலுவலகங்கள் இந்த கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை போஸ்ட் மாஸ்டர்கள் ஆகியோரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கிளை போஸ்ட் மாஸ்டர்கள் அல்லாத கிராம அஞ்சல் பணியாளர்கள், துணை மற்றும் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் பணிபுரிந்து வருகின்றனர். கிராம அஞ்சல் பணியாளர்களைப் பகுதி நேர ஊழியர்...