Posts

Showing posts from June 28, 2024
Image
  'தேர்வு எழுதுங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள்' - ஆசிரியர்களுக்கு எதிராக சாட்டையை சொடுக்கும் உச்ச நீதிமன்றம் 'தகுதி தேர்வு எழுத விரும்பாத ஆசிரியர்கள் ராஜினாமா செய்துவிடலாம்' என பீகார் உள்ளாட்சி ஆசிரியர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்ததோடு, தகுதி தேர்வை ரத்துசெய்யக்கோரிய ஆசிரியர்களின் மனுவையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு, குழந்தைகளின் கல்விக்கு ஆதரவாக பேசியது. "நாட்டில், குறிப்பாக பீகார் மாநிலத்தில் குழந்தைகளின் கல்வியில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ஆனால் எந்த ஆசிரியரும் அரசின் விதியை பின்பற்ற விரும்பவில்லை என்றால், அவர்கள் ராஜினாமா செய்யட்டும். மாணவர்களுக்கு சேவை செய்ய விரும்புவோர் மட்டும் தகுதித் தேர்வை எழுதட்டும்" என்றது.  ஆசிரியர்கள் போராட்டம்  பீகார் மாநிலத்தில் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கீழான பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தங்கள் திறனை சோதிக்கும் தகுதி தேர்வை வலியுறுத்தும் பீகார் பள்ளி பிரத்யேக ஆசிரியர் விதிகள், 2023-ஐ எதிர்த்த...