TRB & TNPSC மூலமாக 46,584 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்! முதலமைச்சர் அறிவிப்பு!! தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 46,584 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார். அடுத்த 18 மாதங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19,260 பணியிடங்களும், 17,595 பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலமாகவும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6,688 பணியிடங்களும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3,041 பணியிடங்கள் என மொத்தமாக 46,584 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைத் தவிர சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளில் காலியாக இருக்கக் கூடிய 30,219 அரசு பணியிடங்களும் நிரப்பப்படும். இவற்றை மொத்தமாக சேர்த்து பார்க்கையில் 75,000-த்திற்கும் மேற்பட்ட அரசுப்பணியிடங்கள் வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் எனவும் அறிவித்தார...
Posts
Showing posts from June 25, 2024