Posts

Showing posts from June 20, 2024
Image
  ஜூன் 18ல் நடைபெற்ற UGC NET 2024 தேர்வு ரத்து - மத்திய அரசு அறிவிப்பு: நடந்தது என்ன?  ஜூன் 18  நடைபெற்ற UGC NET 2024 தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று ( ஜூன் 19 ) அறிவித்துள்ளது. தேர்வில், நேர்மைத்தன்மை சமரசம் செய்யப்பட்டதற்கான அறிகுறிகளைத் தொடர்ந்து UGC-NET தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. UGC NET 2024 தேர்வு: இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant professor ) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.  நெட் நுழைவுத் தேர்வு, இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நடத்தப்படும் என்று அண்மையில் யுஜிசி தெரிவித்தது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தேர்வு என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணின...