கஷ்டம்.. எல்லோராலும் முடியாது.. டிஎன்பிஎஸ்சி தேர்வில் வந்த அந்த கடினமான கேள்வி.. பதில் சொல்லுங்க டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட இந்த கடினமான கேள்விக்கு உங்களால் முடிந்தால் பதில் சொல்லுங்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட இந்த கடினமான கேள்விக்கு உங்களால் முடிந்தால் கீழ் கொடுக்கப்பட்ட பதிலை பார்க்காமல்.. நீங்களாக பதில் சொல்லுங்கள். கேள்வி: 3 men and 4 women can earn Rs. 3,780 in 7 days. 11 men and 13 women earn Rs. 15,040 in 8 days. In what time will 7 men and 9 women earn Rs. 12,400 (A) 9 days (B) 12 days (C) 10 days (D) 11 days (E) Answer not known தமிழ்: 3 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் 7 நாட்களில் ரூ 3,780 வருமானம...
Posts
Showing posts from June 11, 2024
- Get link
- X
- Other Apps
15 லட்சம் பேரோட எதிர்காலம்.. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து பண்ணுங்க.. இவ்ளோ குளறுபடியா? ராமதாஸ் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் குளறுபடிகள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 15 லட்சம் பேரோட எதிர்காலம் என்பதால் உடனே இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வெண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவன ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்தது. 6344 பணியிடங்களுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 15.8 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதன் மூலம் ஒரு இடத்திற்கு 254 பேர் போட்டியிடுகிறார்கள். குரூப் 4 தேர்வு முடிவினை அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த நிலையில், குரூப் 4 தேர்வில் மிகப்பெரிய அளவில் குளறுபடிகள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்றும்,15 லட்சம் பேரோட எதிர்காலம் என்பதால் உடனே இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த வெண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவன ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது...
- Get link
- X
- Other Apps
TN TRB SGT Exam: இடைநிலை ஆசிரியர் தேர்வு திடீர் ஒத்திவைப்பு- புது தேதி அறிவித்த டிஆர்பி! பள்ளிகளில் பணியாற்ற இடைநிலை ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக ஜூன் 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜூலை 21ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும் நிலையில், 1768 இடைநிலை ஆசிரியர் காலி இடங்களை நிரப்பத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தற்போது தற்காலிக ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவதற்கான அரசாணை எண் 149, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே 2024 பிப்ரவரி மாதத்தில் இடைநிலை ஆசிரியர்களை நிரப்பு...
- Get link
- X
- Other Apps
அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டாம் - CEO சுற்றறிக்கை தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைப்படி , பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் நகராட்சி / அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 2023-2024 - ஆம் கல்வியாண்டில் உள்ள இடைநிலை , பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மை குழு மூலம் தகுதி வாய்ந்த நபர்களை கொண்டு தற்காலிக அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது. தற்போது 2024-2025 - ஆம் கல்வியாண்டில் உள்ள இடைநிலை , பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை , பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்து கொள்ள எவ்வித அறிவிப்பும் பள்ளிக்கல்வி இயக்ககத்திலிருந்து பெறப்படாததால் தற்காலிக ஆசிரியர்களை ( கடந்த ஆண்டுகளில் பணியாற்றியவர்கள் மற்றும் புதிய ஆசிரியர்கள் எவரும் ) நியமனம் செய்ய வேண்டாம் என அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது .