
டிஎன்பிஎஸ்சி குரூப் 4: ஆப்சென்ட் ஆனவர்கள் மட்டும் இத்தனை லட்சமா? ரிசல்ட் எப்போது? வெளியான தகவல் தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது மேலும், குரூப் 4 ரிசல்ட் எப்போது வெளியிடப்படுகிறது என்ற தகவலையும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில், 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதுவார்கள். இதனால், பெரிய திருவிழா போன்றே இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- ...