Posts

Showing posts from June 9, 2024
Image
  Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி இருந்தது?- கட் ஆஃப் குறையுமா? தேர்வர்கள் என்ன சொல்கிறார்கள்? தமிழ்நாட்டில் மொத்தம் 6,244 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கேள்வித்தாள் எப்படி இருந்தது? கட் ஆஃப் மதிப்பெண்கள் என்னவாகும் என்பது குறித்துப் பார்க்கலாம். மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களே உள்ள இந்த குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவி மட்டுமின்றி இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் பதவிகளுக்கும் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமே ஆட்சேர்க்கை நடைபெறுகிறது. இன்வேலிட் மதிப்பெண் முறை இந்த முறை புதியதாக இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு கேள்விக்கு தவறான பதிலை டிக் செய்து, பிறகு அதை அடித்துவிட்டு, வேறு ஒரு பதிலை தேர்வு செய்தால், அந்த கேள்விக்கான மதிப்பெண் மதிப்பெற்றதாக (இன்வேலிட்) கருதப்படும். இந்த முறை நடப்பாண்டு முதல்