
TNPSC குரூப் 4 தேர்வு - தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்! தமிழ்நாடு முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல தேர்வு மையங்களில் குரூப் 4 எழுத்து தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விதிமுறைகளை தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ள முக்கிய விதிமுறைகள்; விண்ணப்பதாரர்கள் கருமைநிற மை கொண்ட பந்துமுனைப் பேனாவை (black ink ball point pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள், காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு வருகைப் புரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்வறையின் இருக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், பதிவு எண் மற்றும் புகைப்படத்தையும் சரிபார்த்தப் பின்னரே, தேர்வர் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு ஓஎம்ஆர் (OMR) விடைத்தாள் முற்பகல் 9 மணிக்கு வழங்கப்பட்ட பின்னர் விடைத்தாள் நிரப்புவது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்படும். 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் ...