
' நீட்' ஏகப்பட்ட குளறுபடி.. மறு தேர்வு நடத்த வேண்டும்.. தேசிய தேர்வு முகமைக்கு 2,000 மாணவர்கள் கடிதம் : நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும் முரண்பாடுகள் உள்ளதாகவும் இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். நீட் மறுதேர்வு நடத்த வலியுறுத்தி சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை மனு அடங்கிய கடிதத்தை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார், கருணை மதிப்பெண் வழங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு, இதுவரை இல்லாத அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவைகளை சுட்டிக்காட்டி மறுதேர்வு நடத்த கோரிக்கை வைத்துள்ளனர். தங்களின் எதிர்காலம் தொடர்புடைய விவகாரம் என்பதால் மத்திய அரசும் தேசிய தேர்வு முகமை ஆகியவையும் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தேர்வு முடிவுக்கு முன்பே ஒஎம்.ஆர் ஷீட் மற்றும் வினாக்களுக்கான விடைகளையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேர்வு முடிவு வெளியி...