ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமன பட்டியல் வெளியிட இடைக்கால தடை ..! பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த பிப்ரவரி 4-ந் தேதி நடந்தது. 130 மையங்களில் நடந்த தேர்வை 41 ஆயிரத்து 485 பேர் எழுதி இருக்கின்றனர். தேர்வுக்கான வினாக் குறிப்புகள் பிப்ரவரி 19-ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான நியமன தேர்வில் இறுதி விடை பட்டியில் வெளியிடப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் பணி நியமன பட்டியல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த பட்டதாரி ஆசிரியர் பணி நியமன தேர்வில் ஆங்கில பாட ஆசிரியருக்கான தேர்வில் 13 வினாக்களுக்கு, வினாவுக்கு என்ன பதிலை தேர்வு செய்திருந்தாலும் மதிப்பெண் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 11 வினாக்களுக்கு ஏதாவது 3 பதில்களை தேர்வு செய்தால் மதிப்பெண் என மொத்தம் 24 வினாக்கள் தவறாக இருப்பதால் இதற்கு மதிப்பெண் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு ஏற்புடையதாக இல்லை. எனவே, தற்போது வெளியிடப்பட்ட இறுதி விடை தாளின் அடிப்படையில், பணி நிய...
Posts
Showing posts from June 6, 2024