
வெயில் கடுமையாக இருக்கு... பள்ளியை 10ஆம் தேதி திறக்காதீங்க..!! ஜூன் 3வது வாரத்திற்கு தள்ளி போடுங்க- ஓபிஎஸ் வாட்டி வதைக்கும் வெயில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வீடுகளில் இருந்து மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் பள்ளிகள் 10ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தநிலையில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அலை வீசி வருவதன் காரணமாக, மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் வெப்ப அலை அரசாங்கமே வெளியில் செல்ல வேண்டாம் என்று மக்களை அறிவுறுத்தும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது. பொதுவாக, வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை தாண்டும்போது அதனை வெப்பஅலை என்று சொல்வார்கள். இந்த அளவையும் தாண்டி, தமிழ்நாட்டி...