அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம் அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனைச் சட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அரசுப் பணிக்கு நடத்தப்படும் தேர்வில், தமிழ் மொழித்தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொதுஅறிவு மற்றும் திறனறிவு தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என, கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்தும், தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு...
Posts
Showing posts from May 31, 2024