Posts

Showing posts from May 29, 2024
Image
  ஆகஸ்ட் 3, 4-ல் அரசு கணினி சான்றிதழ் தேர்வு - கல்வித்துறை அறிவிப்பு   அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகஸ்ட் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்), கணக்கியல், அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகிய வணிகவியல் தொழில்நுட்பத்தேர்வுகளை மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு இரண்டு முறை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) நடத்துகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் பருவ அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவரும், தொழில்நுட்பக் கல்வி ஆணையருமான கொ.வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் பருவ அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான அறிவிக்கை ஜுன் மாதம் 2-ம் தேதி வெளியிடப்படும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜுன் 5-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடையும். கருத்தியல் தேர்வு (தியரி) ஆகஸ்ட் 3-ம் தேதியும், செய்முறைத்தேர்வு 4-ம் தேதியும் நடத்தப்படும். தேர்வு முடிவுகள் செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்படும், என்று அதி
Image
  ஸ்லெட் தேர்வு மைய விவரம் எப்போது வெளியீடு? - மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. அறிவிப்பு ஸ்லெட் தேர்வு நாளுக்கு, ஒரு வாரத்துக்கு முன்பாக தேர்வு மைய விவரம் வெளியிடப்படும் என்று நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஸ்லெட் எனப்படும் மாநில அளவிலான கல்லூரி உதவி பேராசிரியர் தகுதித்தேர்வை தமிழக அரசு சார்பில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்துகிறது. ஜுன் மாதம் நடைபெற உள்ள ஸ்லெட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டன. இந்நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மையம் எப்போது தெரிவிக்கப்படும் என்பது குறித்து மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளரும், ஸ்லெட் தேர்வுக்குழுவின் உறுப்பினர்-செயலருமான ஜெ.சாக்ரடீஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: உதவி பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித்தேர்வு ஜுன் 7 மற்றும் 8-ம் தேதி கணினிவழியில் பல்வேறு மையங்களில் நடத்தப்பட உள்ளது. முதல் ஷிப்ட் தேர்வு காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், ஷிப்ட்-2 தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். தேர்வு நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக தேர்வு மைய
Image
  ஆசிரியர் நியமனத் தேர்வு: எந்தெந்த பாடத்தில் எத்தனை தவறான கேள்விகள்? மறு தேர்வு நடத்தப்படுமா? 2023 ஆம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனத் தேர்வில் எல்லா பாடங்களிலும் பல தவறான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனத் தேர்வு கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வினை எழுத மொத்தம் 41,478 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் மே 18 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய தேர்வர்களின் மதிப்பெண்களுடன், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-க்குத் (TET Paper 2) தகுதி பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டன. மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில், 1:1.25 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரி