TNEA 2024: பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்: 2 லட்சத்தை நெருங்கும் விண்ணப்ப பதிவு! விண்ணப்பிக்க கடைசிநாள்: 06.06.2024 பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் போட்டிப்போட்டு ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பிஇ, பிடெக் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்த இடங்களில் 2024-2025-ம் கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 6-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் அன்றே 29,097 பேர் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெற்று வரும் நிலையில், 17-வது நாளான நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 867 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 320 பேர் தேவையான சான்றிதழ்களையும் பத...
Posts
Showing posts from May 23, 2024
- Get link
- X
- Other Apps
19 வகையான துணை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியது பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம்,பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்), பிபிடி, பிஎஸ்சி கிளினிக்கள் நியூட்ரிசீயன், பிஎஸ்சி கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 15 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்நிலையில், அந்த இடங்களுக்கு நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு இன்று (23-ம் தேதி) தொடங்கியது. அதன்படி, மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஜூன் 21-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிக...