
மாணவர்கள் வகுப்புகளை ‘கட்’ அடித்தால் தகவல் பறக்கும் - பள்ளி கல்வித் துறை அதிரடி பள்ளி செல்லும் மாணவர்கள் பள்ளிக்கு வந்த பிறகு வகுப்பை கட் அடித்துவிட்டு வெளியில் சென்று சுற்ற முடியாத அளவுக்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக பெற்றோரை இணைத்து வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் குறித்த விவரங்கள் அனைத்து பள்ளி கல்வித்துறையின் EMIS இணையத்தில் ஒவ்வொரு ஆண்டும் பதிவேற்றம் பணி நடக்கிறது. ஆனால் சில நேரங்களில் சில மாணவர்களின் குறிப்பிட்ட சில விவரங்கள் விடுபட்டுப் போவதால் தேர்வு நேரத்திலும், தேர்வுக்கு பிறகும் அவர்களை தொடர்பு கொள்ளவே முடிவதில்லை. மேலும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைத்தல், தேர்ச்சி பெற்றவர்கள் உயர் கல்விக்கு செல்கிறார்களா என்று அறிந்து கொள்ளவும் செல்போன் எண்கள் தேவையாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்களை பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது. அத்துடன் பெற்ற எண்களுக்கு தொடர்்பு கொண்டு ஓடிபி எண்களையும் கேட்டு வ...