
அரசுப் பணிகளில் ஓய்வு பெற்றவர்கள் நியமனம் - அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!! அரசுப் பணிகளில் ஓய்வு பெற்றவர்களை நியமித்து இளைஞர்களின் வேலைவாய்ப்பினை பறிக்கும் தி.மு.க. அரசிற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சொல்வது ஒன்று, செய்வது ஒன்று" என்பதற்கேற்ப, மூன்றரை இலட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு ஓய்வு பெற்றவர்களை பணியில் அமர்த்துவதையும், ஒப்பந்த முறையில் பணியமர்த்துவதையும், வெளிமுகமை மூலம் பணியமர்த்துவதையும் தி.மு.க. அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை ஒன்றைச் சொல்லிவிட்டு, அதற்கு மாறாக செயல்படுவதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி போலும். பொதுவாக, அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, மருத்துவ தேர்வாணையத்தின் மூலமாகவோ, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ அல்லது பத்திரிகை விளம்பரத்தின் மூலமாகவோ நிரப்பப்படும். இந்த முறையைக் கடைபிடிப்பதன்மூலம் அரசு...