
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு கால அட்டவணை வெளியீடு: விண்ணப்பிக்க ஜூன்.1 கடைசி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், தேர்வை எழுத இயலாமல் போனவர்கள் மீண்டும் எழுத விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. துணைத் தேர்வுக்கான கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான செய்திக் குறிப்பு பின்வருமாறு: நடைபெறவுள்ள ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த / வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும், விண்ணப்பிக்க தகுதியுள்ள இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தனித்தேர்வர்களிடமிருந்தும். பள்ளிமாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 16.05.2024 (வியாழக் கிழமை) முதல் 01.06.2024 (சனிக் கிழமை) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்கு...