Posts

Showing posts from May 8, 2024
Image
  அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் பட்டியல் தயாரிப்பு: டிஆர்பி தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 200 காலி இடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும். அதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்டில் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று 2024-ம் ஆண்டுக்கான டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வரும் ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை கோரியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் வரும் ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, முதுகலை பட்டத...