
நீட் தேர்வு 2024: ஹால் டிக்கெட் ரிலீஸ் எப்போது? கடந்த ஆண்டு தேர்வுக்கு எத்தனை நாட்களுக்கு முன்பு வெளியானது? தேசிய தேர்வு முகமை (NTA) விரைவில் நீட் தேர்வுக்கான (NEET UG) ஹால் டிக்கெட்டை வெளியிட உள்ளது. மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட உள்ளதால், விண்ணப்பதாரர்களுக்கான சிட்டி இன்டிமேசன் ஸ்லிப்பை தேசிய தேர்வு முகமை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் https://exams.nta.ac.in/NEET/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். முன்னதாக, 2021 ஆம் ஆண்டில், நீட் தேர்வுக்கு செப்டம்பர் 6 ஆம் தேதி அட்மிட் கார்டு வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து செப்டம்பர் 12 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டுக்கு, ஜூன் 29 ஆம் தேதி சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் வெளியிடப்பட்டது, ஜூலை 12 ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு, ஜூலை 17 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இறுதியாக, முந்தைய (2023) ஆண்டில், நீட் தேர்வு சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் ஏப்ரல் 30 அன்று வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து மே 7 ஆம் தேதி தேர்வுக்கு முன்னதாக மே 4...