
4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. அதன்படி மார்ச் 28 முதல் ஏப்ரல் 29 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும், ஆகஸ்ட் 4-ஆம் நாள் போட்டித் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர் பணிக்காக காத்திருப்போரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல...