
குரூப் 2, குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு திருத்தப்பட்ட புதிய தேர்வு அட்டவணை வெளியீடு: தேர்வு நடைமுறையிலும் மாற்றம்; டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு குரூப் 2, 2ஏ காலி பணியிடங்கள் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதே நேரத்தில் தேர்வு நடைமுறையிலும் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு துறைகளில் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடத்தப்படும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங்கிய ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இது தேர்வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு உதவியாக இருந்து வருகிறது. அதன்படி, 2024க்கான ஓராண்டு தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது திருத்தப்பட்ட புதிய அட்டவணையை டிஎன...