
மேற்கு வங்கத்தில் 24 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு மேற்கு வங்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு, ஆசிரியர் பணியிடங்கள் தேர்வு மூலம் அரசு உதவி பெறும் மற்றும் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் என 24 ஆயிரம் நியமனங்களை ரத்து செய்துள்ளது. ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக, 9 முதல் 12ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் குரூப்-சி, குரூப்-டி ஊழியர்களின் நியமனத்தை ரத்து செய்திருப்பது, மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 24,640 காலிப்பணியிடங்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வினை 23 லட்சம் பேர் எழுதி 24 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. மேற்கு வங்கத்தில், ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேட்டில், தொடர்புடைய 24 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. அதாவது, நியமன முறை செல்லாது என்று அறிவித்ததன் மூலம், அந்த நியமனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. பள்ளி சேவை ஆணையம் உ...