PhD படிக்க இனி இது மட்டும் போதும்.. மாணவர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்..!! இனி PhD படிக்க 4 ஆண்டுகால இளங்கலைப் பட்டம் பெற்றால் போதும் என பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதேஷ் குமார் அறிவித்துள்ளார். குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் பெற்று 4 ஆண்டுகால இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக PhD படிப்பை தொடரலாம். மேலும், இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் தங்கள் படிப்பைப் பொருட்படுத்தாமல் எந்தப் பாடத்தில் வேண்டுமானாலும் PhD படிக்கலாம். அதேபோல், 4 ஆண்டுகால இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் இனி தேசிய தகுதித் தேர்வில் (NET) நேரடியாக பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
Posts
Showing posts from April 22, 2024
- Get link
- X
- Other Apps
சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..! பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளது. சிறப்பு வகுப்புகளால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைவதாக புகார் வந்ததால் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் இதனையும் மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது. பல தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டுக்கான பாடங்களை கோடையில் நடத்தி வரும் நிலையில் இந்த எச்சரிக்கையை பள்ளி கல்வித்துறை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.