
நீட் தேர்வுக்கு தயாராகுங்கள்!நுழைவுத் தேர்வு டிப்ஸ் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், அவற்றின் கல்லூரிகள் ஆகியவற்றில் உள்ள பொது மருத்துவம் (MBBS), பல்மருத்துவம் (BDS), சித்த மருத்துவம் (BSMS-Bachelor of Siddha Medicine and Surgery), ஆயுர்வேத மருத்துவம் (BAMS - Bachelor of Ayurvedic Medicine and Surgery), ஹோமியோபதி மருத்துவம் (BHMS - Bachelor of Homeopathy Medicine and Surgery), யுனானி மருத்துவம் (BUNS - Bachelor of Unani Medicine and Surgery), இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் (BNYS - Bachelor of Naturopathy and Yogic Sciences), இவற்றுடன் கால்நடை மருத்துவம் (BVSc - Bachelor of Veterinary Science) ஆகியவற்றிற்கான அரசு மற்றும் தனியார் ஒதுக்கீட்டு இடங்களுக்குத் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்யும் அகில இந்திய நுழைவு மற்றும் தகுதித் தேர்வான (National Eligibility Entrance Test - NEET) 05.05.2024 அன்று ஆஃப் லைன் (Offline) முறையில் நடைபெற உள்ளது. தேர்வின் அமைப்பு மூன்று மணி நேரம் நடைபெறும் 180 சரியான விடையைத் தேர்வு செய்யும் ம...