
25% இலவச மாணவர் சேர்க்கை விதிகளை மாற்றியமைக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு பெற்றோர் வலியுறுத்தல் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் பயன்பெறும் வகையில் விதிகளை மாற்றியமைக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதும் உள்ள 8ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமல்படுத்தப்பட்ட ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 4.6 லட்சம்குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்களுக்கான கல்விக் கட்டணமாக சராசரியாக ரூ.370 கோடி தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதற்கிடையே வரும் கல்வியாண்டு (2024-25) இலவச சேர்க்கைக்கான விண்ணப்பபதிவு ஏப்.22-ம் தேதி தொடங்குகிறது. இத்திட்டத்தில் தகுதியானவர்கள் பயன்பெறும் வகையில் விதிகளை மத்திய, மாநி...