
TNPSC Group 2A Result: நீள் காத்திருப்பு; இன்று வெளியாகும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி? அரசுத் துறைகளில் உள்ள 6,151 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. ஜனவரியில் தேர்வு முடிவுகள் அதே 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர். நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகின. முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில் 55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள், 2024 ஜனவரி மாதம் வெளியாகின. எனினும் குரூப் 2ஏ தேர்வுக்கான மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படாமல் இர...