Posts

Showing posts from April 5, 2024
Image
  வரும் கல்வியாண்டில் சிபிஎஸ்இ 11, 12ம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் சிபிஎஸ்இ கல்வி இயக்குனர் ஜோசப் இமானுவேல் கூறியதாவது: 2024-25ம் ஆண்டு முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளில் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் கருத்துகளின் பயன்பாட்டை மதிப்பிடும் திறன் சார்ந்த கேள்விகள் இடம் பெறும். பாடத்திட்ட அடிப்படையிலான கேள்விகள், ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வினா கேள்விகள் 40 முதல் 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டாலும், குறுகிய மற்றும் நீண்ட கேள்விகளின் சதவீதம் 40ல் இருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.  மாணவர்களின் ஆக்கப்பூர்வமான, விமர்சன மற்றும் அமைப்புமுறை சிந்தனைத் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் கற்றலை நோக்கி, மனப்பாடம் செய்வதிலிருந்து விலகிச் செல்லும் கல்விச் சூழலை உருவாக்குவதே வாரியத்தின் முக்கிய நடவடிக்கை ஆகும்.  இதற்காக 2024-2025 கல்வி அமர்வுக்கான மதிப்பீடுகள் மற்றும் மதிப்பீட்டு நடைமுறைகளை புதிய கல்வி கொள்கையுடன் சீரமைப்பதை வாரியம் தொடர்கிறது.  எனவே இந்த கல்வி ஆண்டு முதல் வினாத்தாள்களில் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் கருத்துகளின் பயன்பாட்டை மதிப்பிடும் திறன் அடிப்படைய...
Image
  உதவிப் பேராசிரியா் பணிக்கான ‘ஸ்லெட்’ தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்! உதவிப் பேராசிரியா் பணியில் சேருவதற்கான மாநில தகுதித் தோ்வுக்கு (‘SLET’) தற்போது விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியா் பணியில் சேர ‘நெட்’ (தேசிய தகுதித் தோ்வு) அல்லது ‘செட்’ (மாநில தகுதித் தோ்வு) தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2024 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் ‘செட்’ தோ்வு நடத்தும் பொறுப்பு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு செட் தோ்வுக்கான அறிவிப்பை சுந்தரனாா் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, சமூகவியல், உளவியல், பொது நிா்வாகம் உள்பட மொத்தம் 43 பாடங்களுக்கான ஸ்லெட் தகுதித்தோ்வு ஜுன் 3-ஆம் தேதி கணினிவழியில் நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு சென்ற திங்கள்கிழமை (ஏப்.1) தொடங்கியது.  விருப்பமுள்ள பட்டதாரிகள் இணையதளம் வழியாக ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தோ்வுக்கட்டணம்:  பொதுப்பிரிவ...
Image
  10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் வினா தாள் கடினம்: தேர்ச்சி குறையும் என அச்சம் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத் தேர்வில் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாகவும், மாணவர்கள் தேர்ச்சிகுறையக்கூடும் எனவும் ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்தனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த அறிவியல் பாடத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,107 தேர்வு மையங்களில் 9.07 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில் அறிவியல் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் அதிர்ச்சிதெரிவித்துள்ளனர். அனைத்துபகுதிகளிலும் பெரும்பாலானவை எதிர்பாராத வினாக்களாக இருந்தன. வழக்கமாக இடம் பெறும்கேள்விகள் 25 சதவீதம் அளவுக்குகூட இந்த வினாத்தாளில் இல்லைஎன்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அற...