Posts

Showing posts from April 3, 2024
Image
  TRB - இடைநிலை ஆசிரியர் காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு!!! அரசுப் பள்ளிகளில் 1,768 இடைநிலை ஆசிரியர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்.9-ம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு மார்ச் 15-ம் தேதி முடிவடைந்தது. இதற்கிடையே, விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதிநடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 26,506 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். இதனிடையே, அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதால், பணி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Image
  பிளஸ் 2 வேதியியல் தேர்வு - தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு! தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்.1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி முடிவடைந்தது.  இதனைத்தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி தொடங்கிய 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு  25 ஆம் தேதி முடிவடைந்தது.  அதேபோல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வும்  தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்வுகள் முடிவடைந்த பிறகு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளதாகவும்,  அதற்கான தேதிகளையும்  சமீபத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது.  அதன்படி நேற்று முன்தினம் முதல் விடைத்தாள் திருத்தும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது.  83 மையங்களில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருத்துதல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு விடைக்குறிப்புகள் வழங்கப்படும். மேலும் வினாத்தாளில் ஏதேனும் கேள்விகள் பிழையாக கேட்கப்பட்டிருந்தால்,  அந்த கேள்விக்கு பதில் எழுதியுள்ள மாணவர்களுக்கு அதன் முழு மதிப்பெண்ணும் வழங்கப்படும்.   அந்த வகையில் இந்தாண்டு வேதியியல் பாடத்தில் 3 மதிப்பெண் பகுத
Image
  இடைநிலை ஆசிரியர் தேர்வு; 26,506 பேர் விண்ணப்பம் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இடைநிலை ஆசிரியர் தேர்வு; 26,506 விண்ணப்பம்; ஜூன் 23-ல் தேர்வு இடைநிலை ஆசிரியர் பணிகளுக்கான நியமனத் தேர்வுக்கு 26000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது. டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மார்ச் 15 ஆம் தேதி முடிவடைந்தது, ஆனால் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில், இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு 26,506 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக இடைநில